வீதியைப் புனரமைக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் | தினகரன்

வீதியைப் புனரமைக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பழுதடைந்துள்ள வீதியைப் புனரமைத்துத் தருமாறு பாடசாலை மாணவர்கள் வீதியில் உருண்டு புரண்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கமுதி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வீதி அமைக்கப்பட்டது. தற்போது அந்த வீதி போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாதவாறு பழுதடைந்துள்ளது. இந்த வீதியைப் புனரமைக்குமாறே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியூரிலிருந்து வரும் மாணவர்களும் இவ்வீதியைப் பயன்படுத்த முடியாது அவதியுறுகின்றனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களே வீதியில் உருண்டு புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Add new comment

Or log in with...