ஷங்காய் மாநாட்டில் இந்திய சீனத் தலைவர்கள் சந்திப்பு? | தினகரன்

ஷங்காய் மாநாட்டில் இந்திய சீனத் தலைவர்கள் சந்திப்பு?

கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கக்கில் நடைபெறவுள்ள ஷங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி ஜின்பிங்கையும் பிரமர் மோடி சந்திக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.

 இம்மாதம் 13,14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஷங்காய் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப்போர் வெடித்துள்ளதால், உலகின் வர்த்தகத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவையும் அமெரிக்கா நீக்கியுள்ளது. இந்நிலையிலே சீன, இந்தியத் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.

ஷங்காய் மாநாட்டில் ஜின்பிங்கும் மோடியும் மாநாட்டின் இடையே தனியே சந்தித்து பேச வாய்ப்புகள் உள்ளதாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி 2வது முறையாக வெற்றி பெற்றதற்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்திருந்தார். சீன அதிபரை, இந்தியப்பிரதமர் தன் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றமை, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை சீனாவில் செய்தமை போன்ற பல சம்பவங்களை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தச் சந்திப்பு குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷாங் கான்ஷூவாய் கூறுகையில், '' ஷாங்காய் மாநாடு குறித்த விபரங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருவரது சந்திப்பும் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவையே. சந்திப்பு நிகழ்ந்தால் பரஸ்பர விடயங்கள் மற்றும் உலக விவகாரங்கள் என்பன பற்றிக் கலந்துரையாடப் படும் என்றார்.


Add new comment

Or log in with...