நீர்கொழும்பில் 402 கையடக்கத் தொலைபேசிகளுடன் மூவர் கைது | தினகரன்

நீர்கொழும்பில் 402 கையடக்கத் தொலைபேசிகளுடன் மூவர் கைது

நீர்கொழும்பு, ஏத்துக்கால் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைத்தொடர்பாடல் உபகரணங்களான 402 ஐபோன்கள்,  17,400 சிம் அட்டைகள், 60 ரௌட்டர்கள் மற்றும் 3 மடிக் கணனிகளையும் கைப்பற்றியுள்ளதோடு, மூன்று சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சீன பிரஜை ஒருவரும் அடங்குவதோடு, கற்பிட்டியை சேர்ந்த ஒருவரும் நீர்கொழும்பை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து ஏத்துக்கால் பகுதியிலுள்ள வீடொன்றை இன்று (07) விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டபோது, இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில் தொலைத்தொடர்பு நிலையமொன்றை நடத்திச் சென்றிருக்கலாமெனச் சந்தேகிப்பதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...