08 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டினால் பாதிப்பு | தினகரன்

08 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டினால் பாதிப்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டப் பகுதியில் அமைந்துள்ள தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 08பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதை தொடர்ந்து,  டிக்கோயா கிழங்கன்  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வனராஜா தோட்டப் பகுதியிலுள்ள தேயிலை மலையில் பெண் தொழிலாளர்கள் இன்று (08) காலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவிக் கொட்டுக்கு உள்ளானார்கள். 

தேயிலை மலையின் அடிவாரத்திலிருந்த குளவிக்

கூடு உடைந்த நிலையில், அதிலிருந்து கலைந்து வந்த குளவிகள் குறித்த  தொழிலாளர்களைக் கொட்டியுள்ளது.

காயங்களுக்குள்ளான 08பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  -எம் கிருஸ்ணா)


Add new comment

Or log in with...