இலங்கை கிரிக்கெட் அணியை ஊக்கப்படுத்தும் பாடல் அறிமுகம் | தினகரன்

இலங்கை கிரிக்கெட் அணியை ஊக்கப்படுத்தும் பாடல் அறிமுகம்

இலங்கை கிரிக்கெட், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உடன் இணைந்து “Warak Wati Dewarak Nagi Siti Sinhayan Api எனும் பாடலை அறிமுகப்படுத்தி வைத்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் இடம்பெறும் 2019ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றும்; இலங்கை அணியினரின் பின்னே ONE TEAM ONE NATION’ எனும் தொனிப்பொருளில் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இப்பாடல் அமையப்பெற்றுள்ளது. இப்பாடலை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதுடன் இதனால் கிடைக்கப்பெறும் பணத்தொகையை ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் பாதிக்கப்பட்டோருக்கு, அவர்களுக்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட நிதியத்தின் மூலம் கையளிக்கப்படும்.

இந்த மனது மயக்கும் பாடலானது ஒற்றுமையை பறைசாற்றுவதுடன் உலக கிரிக்கட் மேடையில் எமது தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசத்தின் அணியான இலங்கை கிரிக்கட் அணிக்கு  அனைத்து இலங்கையர்களையும் தமது முழு ஆதரவினையும் வழங்கிட அழைக்கிறது. புகழ்பெற்ற இசைக் கலைஞரான, சங்க தினெத் மற்றும் பாடலாசிரியரான வசந்த மொரகொட ஆகியோர் இணைந்து இயற்றியுள்ள இப்பாடலானது கிரிக்கட் விளையாட்டு மீதான முழு நாட்டு மக்களுக்கும் உள்ள அன்பினை வெளிப்படுத்;துவதாக இருப்பதுடன் அதனை கொண்டாடுவதாகவும் அமைந்துள்ளது. பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட தேசமான இலங்கையின் 21 மில்லியன் சனத்தொகையினரையும் ஒன்று சேர்க்கும் ஒரே காரணமாக திகழ்வது இந்த கிரிக்கட் போட்டியாகும். இது ஒரு பொதுவான தளத்தையும் புரிந்துணர்வினையும்  மக்களுக்கு வழங்குகிறது.


Add new comment

Or log in with...