தென் பிராந்திய பவளப்பாறைகளை பாதுகாக்கும் டோக்கியோ சீமெந்து | தினகரன்

தென் பிராந்திய பவளப்பாறைகளை பாதுகாக்கும் டோக்கியோ சீமெந்து

கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் பவளப் பாறைகளை பாதுகாக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கும் செயற்திட்டத்தில் பங்காளராக இணைந்து கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் Foundation of Goodness அமைப்பு கைச்சாத்திட்டிருந்தது.  

டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness (FOG) ஆகியவற்றுக்கிடையிலான நீண்ட கால ஒன்றிணைவினூடாக, இலாபநோக்கற்ற அமைப்பு தமது சுழியோடல் மற்றும் பயிற்சி பிரிவான “டைவ் லங்கா, டைச் சீனிகம” ஊடாக, சீனிகம மற்றும் ஹிக்கடுவ கரையோரப் பகுதிகளில் காணப்படும் உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக, இலங்கை கடற்படை, வனஜீவராசிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு நிதியம் மற்றும் கடல் வளங்கள் நிதியம் ஆகியவற்றுடன் Foundation of Goodness கைகோர்த்து டோக்கியோ சீமெந்தினால் முன்னெடுக்கப்படும் பவளப்பாறை பாதுகாப்பு திட்டத்துக்கு பிரதான பங்களிப்பு வழங்கவுள்ளது.  

டோக்கியோ சீமெந்து நிறுவனம் சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் மேலாக, தமது பிரதான சூழல்சார் நிலைபேறாண்மை நடவடிக்கைகளில் ஒன்றாக பவளப்பாறைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. இலங்கையின் கரையோரப்பகுதிகளில் காணப்படும் பெருமளவு ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பவளப்பாறை படிமத்தை பாதுகாத்து மீளமைப்பது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய பங்காளர்களுடன் நிறுவனம் கைகோர்த்துள்ளது. பவளப்பாறைகள் அழிவடைவதை தவிர்ப்பதற்காக இந்த சூழல்சார் அக்கறை கொண்ட நிறுவனங்கள் தமது நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. 

பவளப் பாறைகளை மீள வளர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் போன்றவற்றை பல்கலைக்கழக மாணவக் குழுக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தன்னார்வ செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த அணி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.  

இது தொடர்பான ஆய்வுகளுக்கு டோக்கியோ சீமெந்து நிதி வழங்கலை மேற்கொள்வதுடன், நீரினுள் காணப்படும் பவளப்பாறைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கு அவசியமான விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்களை விநியோகிப்பதுடன், தேவையான பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளது. நீண்ட கால பாதுகாப்பு நடவடிக்கைகளில் பவளப்பாறைகளின் உருவாக்கம் மற்றும் அவற்றின் வளர்ச்சி தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்வதை இலக்காகவும் கொண்டு இந்த திட்டம் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.   


Add new comment

Or log in with...