புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம் | தினகரன்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
ஜனாதிபதி, பிரதமருடன் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்

  • ஏனைய அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவி வகிப்பர்
  • புதிய பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்

ஜனாதிபதியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, இன்று (01) காலை புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 18 பேர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மூன்றாவது அமைச்சரவை மாற்றமாகும்.

இது தவிர, ஏற்கனவே உள்ள அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் தொடர்ந்தும் இவ்வமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்பதோடு, புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், நாளைய தினம் (02) சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளனர்.

இந்நிகழ்வு நாளை (02) 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதோடு, அது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளிலிருந்து விலகியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (01) சத்தியப் பிரமாணம் செய்த 18 அமைச்சர்களின் விபரம்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in

01. லக்ஷ்மன் கிரியெல்ல - அரசாங்க தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
02. டொக்டர் சரத் அமுனுகம - விஞ்ஞான, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
03. எஸ்.பி. நாவின்ன - உள் விவகாரம் மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
04. மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
05. துமிந்த திஸாநாயக்க - நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
06. விஜித் விஜயமுனி டி சொய்சா - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
07. பி. ஹரிசன் - சமூக வலுவூட்டல் அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
08. கபீர் ஹாஷிம் - நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
09. ரஞ்சித் மத்துமபண்டார - பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்ட, ஒழுங்கு அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
10. தலதா அத்துகோரள - நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
11. பைசர் முஸ்தபா - உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டு அமைச்சர்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
12. டி.எம். சுவாமிநாதன் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
13. சாகல ரத்நாயக்க - இளைஞர் விவகாரங்கள், திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
14. மனோ கணேசன் - தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் தேசிய மொழிகள் அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
15. தயா கமகே - சமூக நலன் மற்றும் அடிப்படை கைத்தொழில் அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
16. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா - வலுவாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
17. ரவீந்திர சமரவீர - தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு

புதிய அமைச்சரவை; 18 பேர் பதவிப் பிரமாணம்-New Cabinet Ministers Sworn in
18. விஜயதாச ராஜபக்ஷ - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

There is 1 Comment

The appointment of Hon. Wijeydasa Rajapaksa as a minister to the new cabinet is much welcomed by “The Muslim Voice”. We are happy to learn that Hon. Wijeydasa Rajapaksa has been appointed as the Hon. Minister of Higher Education and Cultural Affairs in the new reshuffled cabinet today. “The Muslim Voice” which has always been supportive of Hon. Wijeydasa Rajapaksa’s political endeavours and career, wish him the very best in his political struggle against the elements who are trying to cut you down in the political playing field of Sri Lanka and achieving success. The new Hon. Minister of Higher Education and Cultural Affairs will have the support of the Sri Lankan Muslim Community who believe in reality and community harmony as good as the Sinhala patriotic community of our "Maathruboomiya", in your endeavours, Sir. Sincerely. Noor Nizam. Convener - "The Muslim Voice".

Add new comment

Or log in with...