ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான இரு அமைச்சுகளும் விக்னேஸ்வரனிடம் | தினகரன்

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான இரு அமைச்சுகளும் விக்னேஸ்வரனிடம்

 
வடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகி பதவி விலகிய இரு அமைச்சர்களின் அமைச்கு பதவிகளை வடமாகாண முதலமைச்சர் பொறுப்பேற்றார்.
 
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, வட மாகாண அமைச்சர்களான, ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோர், தங்களது இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று (21) ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து இரு அமைச்சுகளினதும் பதில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
 
பொன்னுத்துரை ஐங்கரநேசனில் பொறுப்பில் இருந்த விவசாய நீர்ப்பாசன மற்றும் கூட்டுறவு அமைச்சினையும், தம்பிராஜா குருகுலராஜாவின் பொறுப்பில் இருந்த கல்வி கலாசார பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை ஆகிய இரு அமைச்சுக்களினதும் பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
 
 
குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், க. சர்வேஸ்வரன் உட்பட வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பிரதிச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். 
 
(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
 

Add new comment

Or log in with...