2019 கிரிக்கட் உலகக் கிண்ணத்திற்காக ICC யுடன் Uber இணைவு | தினகரன்

2019 கிரிக்கட் உலகக் கிண்ணத்திற்காக ICC யுடன் Uber இணைவு

2019 கிரிக்கட் உலகக் கிண்ணத்திற்காக ICC யுடன் Uber இணைவு-Uber ICC Release SL

ஒற்றுமையைக் கொண்டாடும் முகமாக ரசிகர்கள் ஒன்றிணைந்து இசைக்கும் வகையில் உலகக் கிண்ணத்தில் முதல் முத்திரை பதிக்கும் கீதத்தை அது இசைக்கின்றது

உலகின் மிகப்பெரிய தனியார் போக்குவரத்து நிறுவனமான Uber, 2019 ஆம் ஆண்டு ICC உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக சர்வதேச கிரிக்கட் சபையுடன் ஒரு முக்கிய பங்காளியாக இணைந்துள்ளதாக அறிவித்;துள்ளது.

இந்தக் கூட்டு நடவடிக்கை மூலம் Uber முதலாவது போக்குவரத்து மற்றும் உணவு விநியோக App ஒன்றை ICC யுடன் அனுசரணை ஒப்பந்தத்திற்காக ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

கிரிக்கெட், பெருந்தொகையான இரசிகர்களால் பார்க்கப்படுகின்ற விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில் மதிப்பிடப்பட்ட 1.5 பில்லியன் இரசிகர்களால் கண்டுகளிக்கக்கூடிய இந்தப்போட்டி மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜுலை 14 வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெறும்.

Uber 'இந்த உலகக் கிண்ணப் போட்டியை, ஒவ்வொரு இரசிகரும் வெல்வார்' எனும் தொனிப்பொருளுடன், ஒருமைப்பாட்டுடனான கலாசாரத்தை உருவாக்குவதையும் மற்றும் கிரிக்கட் ஆதரவாளர்களை இதயபூர்வமாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது, Way-O, Way-O என்ற உலகக் கிண்ணப் போட்டிக்கான மிகவும் நெருக்கமான முதலாவது கீதத்தை உள்ளடக்குகிறது. இந்த கீதம் ஐந்து பங்கேற்பு நாடுகளில் உள்ள பிரபல கலைஞர்களால் இசைக்கப்படுகிறது.

அத்துடன், இந்த கீதம் ஆர்வமுள்ள இரசிகர்களுக்கு விளையாட்டை சந்தோஷமாக அனுபவிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு பாடலை வழங்குகிறது.

Uber நூற்றுக்கணக்கான சாரதி பங்காளிகளையும், சவாரியாளர்களையும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க வைப்பதோடு, இந்த விளையாட்டுத் தொடரில் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

Uberரின் பிரதம சர்வதேச வர்த்தக அதிகாரி புரூக்ஸ் என்ட்விஸ்ரில் பின்வருமாறு குறிப்பிட்டார். 'நாங்கள் கிரிக்கட்டை உலகளாவிய விளையாட்டாக முன்னேற்றுவதற்கு எமது அர்ப்பணிப்பை வழங்குவதில் உற்சாகமாக இருக்கின்றோம். மேலும், நாம் அவர்கள் மிகவும் அதிகமாக நேசிக்கின்ற விளையாட்டுக்காக எமது சவாரியாளர்கள் மற்றும் சாரதிகளை உள்ளடக்கிய சமூகத்தை ஒவ்வொருவரிடத்திலும் நெருக்கமாகக் கொண்டு செல்ல விரும்புகின்றோம்.

கிரிக்கட் 8 பங்கேற்பு நாடுகளில் மிகவும் ஆர்வமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாடுகளில் உள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கையில் Uberஒரு பிரதான இடத்தை வகிக்கின்றது. இந்தக் கூட்டாண்மை, கிரிக்கட் இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் என நம்புகின்றோம். அத்துடன், நாம் அவர்களின் வழக்மான தேவைகளை கவனித்துக் கொள்வோம்” என்று கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "நாம் உலகக் கிண்ணத்தின்முதல் பாடலைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இது, ரசிகர்களை இதயபூர்வமாகக் கொண்டாட வைக்கிறது. மேலும், இந்த கீதம் உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் கிரிக்கட் ரசிகர்களை சென்றடையும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்” என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டாண்மை பற்றிக் கருத்து வெளியிட்ட, சர்வதேச கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனுசாவ்ஹெனி பின்வருமாறு குறிப்பிட்;டார். ‘2019 ஆம் ஆண்டு 'ICC ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிக்கான Uberஉடனான எங்கள் கூட்டமைப்பைத் தொடர்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

கிரிக்கட் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் T20 உலகக் கோப்பையின்போது தெளிவாக விளங்கியது. அங்கு #RoadSheMade பிரசாரத்துடன், விளையாட்டு வீரர்களின் மறைந்துள்ள சில அற்புதமான கதைகளுக்கு பிரகாசத்தைக் கொடுத்தது. அதையொத்த சில அற்புதமான திட்டங்களை இந்த வருட கோடை கால நிகழ்வுகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், எப்போதும் இல்லாதவாறு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டத்தை எய்துகின்ற நோக்கை பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.

கடந்த வருடம் நிறுவனத்தின் முயற்சிக்கு இணங்க உலகம் பூராகவுமுள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்க UberICC பெண்கள் உலக T20 ஐமேற்கிந்தியத் தீவுகளில் நடத்துவதற்கு தனித்து ஆதரவளித்தது. இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக Uber #JerseyKnowsNoGender பிரசாரத்தை பல்வேறு துறையில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது.

இந்தப்பிரசாரத்தின் நோக்கம், விளையாட்டுக்களில் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிப்பதும் T20 சம்பியன்ஷிப்புக்கான ஆதரவை உருவாக்குவதுமாகும்.

Uber பற்றி
போக்குவரத்தின் ஊடாக வாய்ப்புக்களை உருவாக்குவது Uber இன் நோக்கமாகும். நாம் 2010 ஆம் ஆண்டு ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சவாரி ஒன்றை எவ்வாறு நீங்கள் அணுகலாம்? என்ற இலகுவான வினா ஒன்றுக்குத் தீர்வளிக்க ஆரம்பித்தோம். அதன் பின்னர், மக்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 10 பில்லியனுக்கும் மேற்பட்ட சவாரிகளை வழங்கினோம். நகரங்கள் ஊடாக மக்கள், உணவு வகைகள் மற்றும் ஏனைய விடயங்களில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்காக Uber புதிய வாய்ப்புகளை உலகம் பூராகவும் உருவாக்குவதற்கு ஒரு தளமாக இருக்கின்றது.

ICC கிரிக்கட் உலகக் கிண்ணம் 2019 பற்றி

  • இந்தப் போட்டிமே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறும். அரையறுதிப் போட்டிகள் மன்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிரபர்ட் மைதானம் மற்றும் பேர்மிங்ஹாமிலுள்ள எட்பஸ்டன் மைதானத்திலும் ஜுலை 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும். இறுதிச் சுற்றுப் போட்டி ஜுலை 14 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறும்.
  • இங்கிலாந்து மற்றும் வேல்சிலுள்ள 11 இடங்கள் இவ்விளையாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன - கார்டிபிலுள்ள கார்டிப் வேல்ஸ் மைதானம் (நான்கு போட்டிகள்),பிறிஸ்டலில் உள்ள பிறிஸ்டல் கன்றி மைதானம் (மூன்று போட்டிகள்) டோன்டனிலுள்ள கன்றி மைதானம், (மூன்று போட்டிகள்),பேர்மிங்ஹாமிலுள்ள எட்பஸ்டன் (இரண்டாவது அரைச் சுற்று உள்ளடங்கலாக ஐந்து போட்டிகள்), சௌத்தம்டனிலுள்ள ஹம்ப்ஷயர் போவ்ல் (ஐந்து போட்டிகள்),லீட்சிலுள்ள ஹீடிங்லீ (நான்கு போட்டிகள்) லண்டனில் உள்ள லோட்ஸ் மைதானம் (இறுதிச் சற்று உள்ளடங்கலாக ஐந்து போட்டிகள்),மன்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிரபர்ட் (முதலாவது அரையிறுதி உட்பட ஆறு போட்டிகள்), லண்டனில் உள்ள ஓவல் மைதானம் (போட்டி தொடக்கம் ஐந்து போட்டிகள்), செஷ்ட-லீ வீதியிலுள்ள றிவர்சைட் டொர்ஹாம் (மூன்று போட்டிகள்) மற்றும் நத்திங்ஹாமிலுள்ள டிரன்ட் பிரிட்ஜ் (ஐந்து போட்டிகள்).
  • இரண்டு அரையிறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெறுவதற்கான 45 ஆட்டங்களின் பின் தகுதி பெறும் முதல் நான்கு அணிகளுடன்10 போட்டியிடும் அணிகள் ஒரு தனித்த லீக் வடிவத்தில் ஒன்றுக்கொன்று எதிராக விளையாடும்.
  • இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியன ஏற்கனவே 1975, 1979, 1983, 1999 ஆகிய வருடங்களில் ICC உலகக் கிண்ணத்தை நடத்தியுள்ளது.
  • 1987, 1999, 2003, 2007, மற்றும் 2015 ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்ற ஒஸ்ரேலியா உலகக் கிண்ண வரலாற்றில் மிக வெற்றிகரமான அணியாகும். 1975 மற்றும் 1979 ஆம்ஆண்டுகளில் முதல் இரண்டு உலகக் கிண்ணங்களையும், மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றின. 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் 1992 இலும், இலங்கை 1996 இலும் வெற்றி பெற்றன.

Add new comment

Or log in with...