Thursday, March 28, 2024
Home » குற்றவாளிகளிடமிருந்து விடுவிக்க எத்தகைய கடும் தீர்மானத்தையும் எடுக்கத் தயார்
நாட்டு, மக்கள், எதிர்கால பரம்பரையை

குற்றவாளிகளிடமிருந்து விடுவிக்க எத்தகைய கடும் தீர்மானத்தையும் எடுக்கத் தயார்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

by damith
January 8, 2024 11:28 am 0 comment

நாட்டையும் நாட்டு மக்களையும் எதிர்கால பரம்பரையையும் குற்றவாளிகளிடமிருந்து விடுவிப்பதற்கான எந்தவொரு கடுமையான தீர்மானத்தையும் மேற்கொள்வதில் பின்நிற்கப் போவதில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முகங்களை இனங்காணும் நவீன கமரா தொகுதியை உத்தியோகபூர்வமாக ஸ்தாபித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல்தடவையாக இவ்வாறான அதிநவீன தொழில்நுட்ப தானியங்கி கமரா கட்டமைப்பு தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

நாட்டிலிருந்து குற்றச்செயல்களை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் தற்போது விசேட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக பொலிஸ் துறையின் சகல அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். அதன்மூலம் இதுவரை சிறந்த பிரதிபலன்களை பெற்றுக்ெகாள்ள முடிந்துள்ளது.

அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை அதிகரித்து தேவையான வசதிகளைப் பெற்றுக்ெகாடுப்பது எமது பொறுப்பாகும். ஒரு குற்றச்செயல் இடம்பெற்று 24 – 48 மணித்தியாலங்களுக்குள் அந்த குற்றவாளியை இனங்காணுவதற்கு பொலிஸாரினால் முடியுமானால் அவ்வாறன குற்றவாளி விமான நிலையத்தினூடாகவோ அல்லது கடல் மார்க்கமாகவோ நாட்டிலிருந்து தப்பிச் சென்றுவிடுவார்.

விமான நிலையத்தின் மூலம் அவ்வாறு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு மேற்படி முகங்களை இனங்காணம் தொகுதிக்கான ஆரம்ப கட்ட நடவடிக்ைகயே மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் குற்றத்தடுப்பு ஆய்வு திணைக்கள தகவல் தொழில்நுட்ப்ப் பிரிவினால் தற்போது அதனை முழுமையாக ஸ்தாபிக்க முடிந்துள்ளது. எந்தவொரு குற்றவாளியும் நாட்டுக்குள் மறைந்திருப்பதற்கு இடமளிக்காத வகையில் நாம் அனைத்து நடவடிக்ைககளையும ்மேறகொண்டுள்ளோம். எவர் எத்தகைய தடைகளை மேற்கொண்டாலும் அதனை எவராலும் நிறுத்தமுடியாது. நாட்டின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதற்காக ஒன்றிணைவர்.

அந்தவகையில் பாதாள உலகக் குழு போதைப் பொருள் வர்த்தகர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோரை ஒழிப்பது கஸ்டமான நடவடிக்ைகயாக இருக்காது என அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT