சிங்கர் அறிமுகம் செய்யும் பாம் மாஸ்டர் டிரக்டர் விக்கினோ | தினகரன்

சிங்கர் அறிமுகம் செய்யும் பாம் மாஸ்டர் டிரக்டர் விக்கினோ

விவசாய பொருளாதாரத்தின் மீது முதன்மை அவதானத்தை செலுத்துவதன் மூலமே எதிர்கால இலங்கையின் சுபீட்சத்தை எட்ட முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். பூகோள ரீதியில் நாட்டின் அமைவிடம், வளமான மண், பயிர்ச்செய்கைக்கு தகுதியான தரை மற்றும் சேற்று நிலத்தின் அளவு, நீர்ப்பாசனக் கட்டமைப்பு, பருவப்பெயர்ச்சி மழை ஆகிய காரணிகள் உணவு உற்பத்தியில் இலங்கயை தன்னிறைவாக்க முடியும் என்பதற்கான ஆதாரங்களாகும்.  

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் உள்நாட்டு விவசாயிக்கு பலம்சேர்த்து கடந்த பல ஆண்டுகளாக விவசாயத் துறையில் தேவையை பூர்த்தி செய்கின்ற பல்வேறு இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை இலங்கைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சிங்கர் நிறுவனம் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்கின்ற வக்கினோ பாம் மாஸ்டர் கை டிரக்டருக்காக இலங்கையில் அதிகாரம் பெற்ற விற்பனை பிரதிநிதியாக 2013ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதோடு அந்த ஆண்டிலேயே மஹா அலுப்பல்லம விவசாய நடவடிக்கை பரிசோதனை நிறுவனம் மூலம் அதற்காக FMRC தகைமை சான்றிதழ் வழங்கப்பட்டது.   தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அதிக விற்பனை உள்ள இரண்டு சக்கரங்கள் கொண்ட கை டிரக்டர் என முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்திய பாம் மாஸ்டர் கை டிரக்டர் சிறப்பான செயற்பாடு, செயற்திறன் மற்றும் உத்தரவாதம் தொடர்பில் விவசாயிகளிடம் நம்பிக்கையை வென்றுள்ளது.  

12எஞ்சின் குதிரைத் திறன் கொண்ட FM250மற்றும் 8எஞ்சின் குதிரைத் திறன் கொண்ட FM80என சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விக்கினோ பாம் மாஸ்டர் கை டிரக்டர் இரண்டு வடிவங்களுக்காக இரண்டு தடவைகள் பராமரிப்புச் சேவை இலவசமாக கிடைப்பதோடு சிங்கர் நிறுவனத்தின் அதிக நம்பிக்கையுடன் 6மாதங்கள் உத்தரவாதங்களும் கிடைக்கிறது.

இலவசமாக கிடைக்கின்ற சேவைகளுக்கு மேலதிகமாக பராபமரிப்பு மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கை நாட்டின் எந்த ஒரு இடத்திலும் டிரக்டர் இருக்கின்ற இடத்திற்கு வந்து செய்து தரப்படும்.

FM 250கை டிரக்டருக்காக சேற்று சக்கர சோடி ஒன்று, ஹைட்ரோலிக் ஜேன் ஒன்று, உதிரிப்பாகத் தொகுதி ஒன்று மற்றும் காற்று விசை கருவி ஒன்று இலவசமாகக் கிடைப்பதோடு FM 80வடிவத்திற்காக உபகரணங்கள் கொண்ட பெட்டி ஒன்று இலவசமாக கிடைக்கும்.

அதேபோன்று விவசாயிகளுக்கு வசதியாக டிரக்டரின் பதிவும் சிங்கர் நிறுவனத்தினால் இலவசமாக செய்து தரப்படும்.

மேலும் விகினோ பாம் மாஸ்டர் கை டிரக்டரின் உத்தரவாதம் மற்றும் செயற்திறனை அதிகரிப்பதற்கு காரணியாகின்ற ரேடியேட்டருக்காக பயன்படுத்த வேண்டிய குளிர்த்தியும் முதன்முறையாக பெற்றுத்தரப்படும்.   


Add new comment

Or log in with...