பீப்பள்ஸ் லீசிங் ஹொரணை கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம் | தினகரன்

பீப்பள்ஸ் லீசிங் ஹொரணை கிளை புதிய முகவரிக்கு இடமாற்றம்

அதிகரித்துச் செல்லும் வாடிககையாளர் வலையமைப்புக்கு மேம்படுத்தப்பட்ட சிக்கல்களில்லாத வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை அதிகளவு இடவசதியுடன் கூடிய முடிவரிக்கு இடம்மாற்றியுள்ளது. 

இரத்தினபுரி வீதியில் அமைந்துள்ள இந்தக் கிளையை, பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பொது முகாமையாளருமான சப்ரி இப்ராஹிம் திறந்து வைத்தார். 

இலங்கையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ஹொரண திகழ்கிறது. பெருமளவு ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், மக்களின் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும் உதவுகின்றது. எனவே, லீசிங் மற்றும் நிதிச் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தக்கு விஜயம் செய்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த புதிய அதிகரித்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பீப்பள்ஸ் லீசிங் தனது ஹொரண கிளையை, அதிகளவு வசதிகள் படைத்த புதிய பகுதிக்கு இடம்மாற்றியுள்ளது.” என்றார். 

இந்த நிகழ்வில், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க, பிரதம முகாமையாளர் (செயற்பாடுகள்) பிரியங்கா விமலசேன மற்றும் ஹொரண கிளை முகாமையாளர் நுவன் தரங்க ஆகியோருடன் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜீவ பண்டாரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதன் காரணமாக ஹொரண வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பிரதேசமாகும். ஹொரண பிரதேசத்தை அண்மித்து வாழும் மக்கள் தமது நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பீப்பள்ஸ் லீசிங் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே, ஹொரண பிரதேசத்தில் அதிகளவு வசதிகள் படைத்த கிளை ஒன்று காணப்பட வேண்டியதற்கான தேவையை நாம் இனங்கண்டிருந்தோம்.


Add new comment

Or log in with...