ஸ்ரீலங்கா தொழில்நுட்ப வளாக மாணவர்களுக்கு கொமர்ஷல் வங்கியின் கல்விக் கடன் வசதி | தினகரன்

ஸ்ரீலங்கா தொழில்நுட்ப வளாக மாணவர்களுக்கு கொமர்ஷல் வங்கியின் கல்விக் கடன் வசதி

ஸ்ரீலங்கா தொழில்நுட்ப வளாகத்தில் உயர் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவதற்கு கொமர்ஷல் வங்கி முன்வந்துள்ளது. மேற்படி வளாகத்தின் ஒத்துழைப்போடு இந்த மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டத்தை அமுல் செய்ய கொமர்ஷல் வங்கி முன்வந்துள்ளது. ‘இப்போது படியுங்கள் பிறகு செலுத்துங்கள் என்ற தொனிப் பொருளின் கீழ் இந்தக் கடன்கள் வழங்கப்படவுள்ளன.

பத்து ஆண்டுகளில் மீள செலுத்தக் கூடிய மேலும் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கக் கூடிய விதத்தில் ஐம்பது லட்சம் ரூபா வரை இந்தத் திட்டத்தின் மூலம் கடனாக வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க SLTC ஸ்தாபகத் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான றன்ஜித் ஜி ரூபசிங்க, விந்த்யா செனவிரத்ன கணக்காளர், மகேஷ் டி சில்வா நிதிப்பிரிவு பொறுப்பாளர், நாமல் டயஸ் SLTC இன் கூட்டாண்மை பிரிவு பொறுப்பாளர், கொமர்ஷல் வங்கியின் சந்தைப் படுத்தல் பிரிவு பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க, SLTC இன் மக்கள் மற்றும் கலாசாரப் பரிவு பொறுப்பாளர் டொக்டர் லலித் விஜேதுங்க, பிரதான முகாமையாளர் சனத் எல்பிட்டிய, முகாiயாளர் சந்தன அபேசுந்தர, நிறைவேற்று அதிகாரி அசங்க சன்ஜீவ மற்றும் வங்கியின் சில்லறை உற்பத்திப் பிரிவு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...