போதையில் வெறியாட்டம்; பிக்குகள் இருவர் கைது | தினகரன்

போதையில் வெறியாட்டம்; பிக்குகள் இருவர் கைது

2 Monk Arrested For Unruly Behavior-போதையில் வெறியாட்டம்; பிக்குகள் இருவர் கைது
(வைப்பக படம்)

மது போதையில் முறையற்று செயற்பட்ட பிக்குகள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, புலுகஹமுல்ல பிரதேசத்தில், குடித்துவிட்டு பிரதேசத்தில் முறையற்று நடந்த இரு பிக்குகள் பிரதேசவாசிகளால் மினுவாங்கொடை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (22) இடம்பெற்ற இச் சம்பவத்தை அடுத்து, குறித்த பிக்குகள் இருவரும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் எச்சரிக்கை விடுத்த நீதவான் கேசர சமரதிவாகர, தலா ரூபா 1,000 வீதம் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

குறித்த பிக்குகளில் ஒருவர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதோடு, மற்றையவர் மினுவாங்கொடை, கலவான பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

(மினுவாங்கொடை குறூப் நிருபர் - சிறிசேன அத்தநாயக்க)


Add new comment

Or log in with...