ரூ. 17 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இருவர் கைது | தினகரன்

ரூ. 17 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இருவர் கைது

ரூ. 17 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இருவர் கைது-Rs 17 Laksh Worth Foreign Cigarettes Seized-BIA Customs

ரூபா 17 இலட்சத்து 16 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (26) திகாலை 5.30 மணியளவில் துபாயிலிருந்து FZ 5127 எனும் விமானத்தில் வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்க திணைக்கள மேலதிகப் பணிப்பாளர் நாயகமும், ஊடகப் பேச்சாளருமான  சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

143 கார்ட்டூன்களில் பொதி செய்யப்பட்ட 28,600 சிகரெட்டுகள்  இதன்போது மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கண்டியைச் சேர்ந்த 42, 48 வயது உடைய இரு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 


Add new comment

Or log in with...