நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை | தினகரன்

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை-Weather-Thunder Shower Around the Island

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.  


Add new comment

Or log in with...