பதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில் | தினகரன்

பதுரலிய பாடசாலைக்குள் கைக்குண்டு: சந்தேக நபர் சிஐடியில்

பதுரலிய பிரதேசத்தில் பாடசாலை வளாகமொன்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பதுரலிய, ஹெடிகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஹப்புராய்ச்சிகே பவித்திர மதுசங்க எனும் இச்சந்தேக நபர் (32), பதுரலிய பொலிஸாரினால் நேற்று (24) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பதுரலிய, திக்ஹேனபுர பிரதேசத்திலுள்ள பாடசாலை வளாகத்திலிருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் கைக்குண்டுகளை  நேற்றுமுன்தினம் (23) இரவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, அப்பொதியில் 13 கைக்குண்டுகள் மற்றும் 17 அடி நீளமான மின்கம்பியொன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


Add new comment

Or log in with...