நிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு | தினகரன்


நிந்தவூரில் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு

நிந்தவூர் 18ஆம் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாய்ந்தமருது, மாளிகைக்காட்டைச் சேர்ந்த முஹம்மது அஜ்மில் (26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குடும்பத் தகராறு காரணமாக நேற்றிரவு (24) இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கத்திக் குத்தில்  குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர், நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, குறிந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தவர்கள் உடனே தலைமறைவாகியதாக,  வைத்தியசாலையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

கத்திக்குத்து  சம்பவத்துடன் தொடர்புடையவர்களையும், வைத்தியசாலையில் அனுமதித்தவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

(சுலைமான் ராபி -நிந்தவூர் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...