கடல் சங்குகளை கொண்டு சென்றவர் கைது | தினகரன்

கடல் சங்குகளை கொண்டு சென்றவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கடல் சங்குகளை வாகனமொன்றில்கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (23) கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து 2,500 கடல் சங்குகள்  கைப்பற்றப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸாரும்  கடற்படையினரும்  இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, சங்குகளுடன் இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.  

மன்னார்–தலைமன்னார் பிரதான வீதி,  தாராபுரம் சந்தியிலுள்ள  வீதித்தடையில் வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் சங்குகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதோடு, சந்தேக நபர் பேசாலையிருந்து மன்னாருக்கு சங்குகளை கொண்டுசென்றதாகவும்  கடற்படையினர் தெரிவித்தனர். .

பேசாலையைச் சேர்ந்த சந்தேக நபரை, சங்குகள் மற்றும் வாகனத்துடன்    மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.  

(றொசேரியன் லம்பேர்ட் -மன்னார் குறூப் நிருபர்)

 

 


Add new comment

Or log in with...