யார் இவர்? என்ன செய்கின்றார்? | தினகரன்

யார் இவர்? என்ன செய்கின்றார்?

ரொஹான்

அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் ஜனாதிபதி அண்மையில் ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். தான் நேரடியாக தொடர்புடைய அரசியல் துறையைப் பற்றி அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி ஒருவர் கூறிய நேர்மையான கூற்றாக கூறப்படும் இதன் மொழிப்பெயர்ப்பு “அரசியல்வாதியால் முகாமைத்துவம் செய்ய முடியாது. பேச மாத்திரமே முடியும்.”

இக்கூற்று அரசியல்வாதிகள் அனைவருக்கும் கூட்டியோ குறைத்தோ பொருந்தும் உண்மையான நிலையேயாகும். அதனை இந்நாட்டு மக்களும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அதைப் பற்றி பகிரங்கமாக பேசுகின்றார்கள். சமூக வலைத்தளங்களிலும் பகிர்கின்றார்கள். அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் அது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க அவை பாரதூரமான செய்திகளாக அமைவதில்லை. அதற்கு காரணம் பொதுமக்கள் "அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகள், பொய் கூறுபவர்கள், தந்திரசாலிகள்" என்னும் எண்ணத்தைக் கொண்டுள்ளார்கள். அதனால் அவர்களின் கூற்றுப் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை.

ஆனால் சில துறைகளில் உள்ள அறிவியலாளர்கள் பற்றி எமது சமூகத்தில் இது குறித்து மாற்றுக்கருத்தே உள்ளது. அறிவியலாளர்களின் கூற்றுகள், உரைகள் என்பவற்றில் நாம் செவிமடுப்பது அத்துறை பற்றி புதிதாக ஏதேனும் அறிந்து கொள்வதற்காகத்தான். அவரின் பெயருடன் இணைந்துள்ள கௌரவப் பட்டங்கள், பதவிகள், தராதரங்கள் எமது நம்பிக்கையை அதிகரிப்பதோடு அவர்களுக்கான விடயம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கும் பெறுமதியை அழிக்கின்றது.

அண்மைக்கால சரித்திரத்தில் அரசியல் நோக்கத்திற்காக பாவிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருக்கின்றது. அதனை நாம் தவறாக எண்ணாமைக்கு காரணம் அவர்களுக்குள்ள உரிமையை மதிப்பதனால் மாத்திரம் அல்ல. அவர்கள் வேறு விடயங்கள் தொடர்பாக மிக வளர்ச்சியடைந்த கோணத்தில் நோக்குகின்றார்கள் என்ற நம்பிக்கையினாலாகும். அதனை மதிக்கும் விதத்தில் அவ்வாறான கருத்துகளை கூறுபவர்கள் குறைந்தபட்சம் தங்களுடைய விசேட நிபுணத்துவம் கொண்ட துறை தொடர்பிலாவது உண்மைத் தன்மையை பாதுகாக்கவும் அரசியல் நிலைமையை கட்டுப்படுத்தவும் முயற்சி செய்கின்றார்கள்.

ஆனால் இந்த அன்னியோன்ய மதிப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தி தனக்கு நேரடியாக தொடர்புடைய விடயத்தை, அரசியல் நண்பரொருவரை திருப்திப்படுத்துவதற்காக அறிவியலாளர் ஒருவர் மீண்டும் அரங்குக்கு வந்துள்ளார். பேராசிரியர் ரொஹான் குணரத்ன பற்றி 2003ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வெளியாகும் ‘தி ஏஜ்’ (The Age) பத்திரிகைக்கு கெரி ஹியூஸ் கடிதமொன்றை வழங்கியிருந்தார். ‘அல் கொய்தா அல்லது பயங்கரவாதம் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டிய எல்லா சந்தர்ப்பங்களிலும் ரொஹான் குணரத்ன அதற்காக முன்வருகின்றார். சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு அவர் வருகின்றார்.

இதனை பார்க்கும் போது ரொஹான் குணரத்னவை பாராட்டுவது போல் தோன்றினாலும் கெரி ஹியூஸ் தனது கடிதத்தின் ஊடாக ரொஹான் குணரத்னவின் இந்த இயற்கைக்கு மாறான முன்வருதலை குறிப்பிட்டிருந்தார்.

2001ம் ஆண்டு மார்ச் மாதம் காபூலின் தலிபான் பயங்கரவாதிகள் பாமியன் புத்தர் சிலைகளை தாக்கிய வேளையில் ரொஹான் குணரத்ன இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பு பற்றிய நிபுணராக சுய அறிமுகத்துடன் திடீரென சர்வதேச ஊடகங்களினூடாக வெளித் தோன்றினார். ஆனால் அவர் தொடர்பாக ஆர்வம் ஏற்பட்டது நியூயோர்க்கில் உலக மத்திய வர்த்தக சந்தை கட்டிடத்திற்கு அல்கொய்தா தாக்குதல் நடத்தப்பட்ட வேளையிலாகும்.

அவ்வேளையில அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச ஆய்வாளர்களோ அல்லது விமர்சகர்களோ குறைந்தளவே காணப்பட்டார்கள். 9/11 தாக்குதலுடன் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்துக் கூறக் கூடிய நிபுணர்களை தேடிக் கொண்டிருந்த வேளையில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி ரொஹான் குணரத்ன இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி எல்லாம் அறிந்த ஆய்வாளர்களாக தோன்றினார்.

அதற்கு முன்னர் இலங்கையில் செயல்பட்ட விடுதலைப் புலிகளின் ஈழப் போராட்டத்தைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த குணரத்ன திடீரென அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி எவ்வாறு எல்லாம் அறிந்த நிபுணராக மாறினார் என்னும் கேள்வி அனைத்து ஊடக நிறுவனங்களும் அறிய மறந்த விடயங்களாகும். ஊடகத்திலிருந்த இடைவெளியை தனது வார்த்தை ஜாலங்களால் பயங்கரவாதத்தின் உண்மைத் தன்மைக்கு பதிலாக தனது மனதிலுள்ள அனுமான அர்த்தங்களுக்கு உண்மை எனும் முத்திரை பதிக்கக் கூடிய சந்தர்ப்பம் ரொஹானுக்குக் கிடைத்தது.

பயங்கரவாதம் தொடர்பான ஆய்வு மற்றும் அரசியலுக்கு இடையில் தொடர்பு பற்றி தெளிவாக விளக்க முடியாத ஆய்வாளர்கள் கூட்டத்தின் ஒரு இணைப்பாக குணரத்ன மாறியிருந்தார்.

இதனூடாக பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றி மிக நன்றாக அறிந்த புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் முதற்தடவையாக சவாலுக்குட்பட்டது ரொஹான் குணரத்னவின் கூற்றில் சந்தேகத்தை ஏற்படுத்த வழிவகுத்தது. பயங்கரவாதிகளின் திறமையை அதிகமாக சுட்டிக்காட்டும் ஒரு ஆய்வாளர் மற்றும் அதிகரிக்கும் பயங்கரவாத பீதியின் காரணமாக திடீரென வளர்ச்சி பெறும் திட்டங்கள் இடையேயுள்ள நிதி தொடர்புகள் பற்றி வெளிநாடுகளின் கவனம் ஈர்க்கப்படுவது இவ்வாறான காரணங்களாலேயே.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ‘ASIO’ குணரத்னவின் ‘ஹித்தலு’ ஊடாக வெளியிட்ட கருத்துக்களை கண்டிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெமா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரும் அல்கொய்தா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஹம்பாலியும் (Hambali) அடிக்கடி அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருவதாக கூறிய கூற்றே இவ்வாறு ‘ASIO’ வின் குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி ஆய்வு நடத்தும் ஆய்வாளர்களிடையே சர்வதேச ரீதியில் ரொஹான் குணரத்ன எவ்வளவு பிரபலமாக இருந்தார் என்றால் பிரித்தானியாவில் வெளியாகும் ‘த ஒப்சேவர்’ பத்திரிகையில் உள்ளக நடவடிக்கை ஆசிரியரும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தொடர்பான நீண்டகால ஆய்வாளரும் ஊடகவியலாளருமான மார்ட்டின் பிரைட் கூறிய செய்தி வெளிவந்துள்ளது. பின்லேடன் பற்றி கூறும் நபர்களில் குறைவாக நம்பிக்கை வைக்கக் கூடிய நபர் அவர் ஆவார். பிரித்தானிய அதிகாரிகள் அவரை சோதிடராக பார்க்கின்றார்கள்.

அவுஸ்திரேலியாவின் புலனாய்வுத் தகவல்கள் நிபுணரும் ஊடகவியலாளருமான பிரையன் டுவி ஒருமுறை ரொஹான் குணரத்னவை பற்றிக் கூறும் போது “அவர் தானே தன்னை நிபுணர் என்று கூறிக் கொண்டவர்" என குறிப்பிடுகின்றார். 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட குணரத்னவின் கடிதமொன்று அவுஸ்திரேலியாவின் அரசியலமைப்பு தேர்தலில் பயங்கரவாதக் குழுக்கள் தேர்தல் தொகுதிகளில் வாக்குகளை பத்தாயிரம் தொடக்கம் இருபதாயிரம் வரை மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்கள் எனக் கூறுவது அவுஸ்திரேலிய ஊடகங்களில் நகைச்சுவையாக வெளியிடப்பட்டிருந்தது.

நாடுகளில் பயத்தை ஏற்படுத்தி தனது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்வது அவரது முயற்சி என தெளிவாகியுள்ளது. அது தொடர்பான சரியான சாட்சி 2003ம் ஆண்டு நியூஸிலாந்தில் வெளிவந்தது. அவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஹெரல் பத்திரிகையில் வழமை போல் பொறுப்பற்ற சாட்சிகள் இல்லாத செய்தியொன்றை குணரத்ன வெளியிட்டார். அதாவது அந்நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அணிகள் பல செயற்படுவதாக கூறினார். அவர்கள் நிதி சேகரிப்பதிலும் அடிப்படைவாதத்தை பரப்புவதிலும் புதியவர்களை இணைத்துக் கொள்வதிலும் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் நியூஸிலாந்து நிதி இரகசிய பிரிவு அக்கூற்றை நேரடியாகவே மறுத்திருந்தது. பயங்கரவாத அணிகள் தொடர்பாக எவ்விதமான அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் நியூஸிலாந்தில் இல்லையென்றும் நிதி இரகசியப் பிரிவு உறுதி செய்திருந்த வேளையில் ரொஹான் குணரத்னவின் கூற்று காரணமாக அந்நாட்டு கிறிஸ்தவ மதத்தினருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே தேவையற்ற பயத்தை உருவாக்கியது. தன்னுடைய சொந்த நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் க்ரைஸ் தேவாலய தாக்குதல் போன்ற செயலாக வளர்ச்சியடையும் என ரொஹான் குணரத்ன போன்ற பேராசிரியர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என யாரால் கூறமுடியும்?

ரொஹான் குணரத்ன தன்னால் உருவாக்கப்பட்ட இஸ்லாம் பயங்கரவாதம் பற்றி சர்வதேச ஆய்வாளர் என்னும் பெயரை கேள்வி கேட்பதற்கு இந்நாட்டு ஊடகங்கள் நடவடிக்கை எடுக்காதபோதும் நியூஸிலாந்து ஊடகம் அவரது பொய்யான கூற்று பற்றி கேள்வி எழுப்பியதுடன் அந்த அடிப்படை அற்ற கூற்று குறித்து அவரிடம் சாட்சியங்களை பெற்றுக் கொள்ளும்படி நியூஸிலாந்து பாதுகாப்பு பிரிவினருக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

தற்போது இந்நாட்டில் பொதுமக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பு பற்றி பயத்துடனும் சந்தேகத்துடனும் இருக்கும் பின்னணியில் இலங்கை ஊடகங்கள் இந்த ஆய்வாளரை தமது வள பங்களிப்பாளர்களாக பயன்படுத்தி நேரடியாக பாதுகாப்பு பிரிவினருக்கு ஏற்படுத்தியுள்ள அவமானத்தைப் போன்று நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ள பெரும் பாதிப்பு என்பதை ஊடகங்கள் கூட புரிந்து கொள்ளவில்லையென தெரிகின்றது. ஆனால் இந்த பயங்கரவாதம் பற்றி கண் திறந்து பார்க்க வேண்டிய சரியான நேரம் வந்துள்ளதாக எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

அதற்கான எண்ணத்தை ஏற்படுத்த உங்களுக்குத் தேவையான சாட்சியங்களை அறிய நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த வருடம் (2018) மே மாதம் 13ம் திகதி கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்ற ‘வியத்மக’ அமைப்பின் வருடாந்த சம்மேளனத்தில் பிரதான உரையாற்றுவதற்கான வந்திருந்த இந்த பேராசிரியர் உரையாற்றத் தொடங்கும்போது அங்கிருந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கோபத்துடன் எழுந்து சென்றது ஏன் என்று ஆராய்ந்தாலே போதும்.

இந்நாட்டு சகோதர ஊடகங்கள் மறந்து போன முக்கிய விடயமொன்று எல். ரீ.ரீ.ஈ அமைப்புடன் யுத்தத்தின் இறுதி வேளையில் ரொஹான் குணரத்ன இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாதென தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு கூறியதன் மூலம் எமது நாட்டு இராணுவத்தை மீளவும் இழிவுபடுத்தினார்.

அவ்வாறானவரை வியத் மகவின் பிரதான உரையாற்ற அழைத்திருந்தது கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் போக்கை வெளிப்படுத்துவதாகும். அவ்வாறான முடிவுகளுக்கு கோட்டடாபய ராஜபக்ஷ வந்தால் தாம் முடிவு எடுக்கவேண்டும் என சம்மேளத்தில் கலந்துகொண்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறியது இரகசியமான முடிவு அல்ல. இந்த பயங்கரவாத ஆய்வாளரின் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற செயலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது கனடாவின் தமிழ் காங்கிரஸ் தொடர்பாக தனது ஊடகங்கள் மூலம் தெரிவித்த குற்றச்சாட்டின் மூலமாகும்.

2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் லக்பிமவுக்கு தெரிவித்த செய்தியில் ரொஹான் குணரத்ன எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு கனடாவில் செயல்படுவது கனடியன் தமிழ் காங்கிரஸ் எனும் பெயரில் எனக் கூறியிருந்தார். வழமை போல் எவ்வித சாட்சியம் இன்றி குறிப்பிட்டிருந்தார். இதனூடாக யுத்தத்திற்கு எதிரான கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் டயஸ் போராவின் சந்தேகம், அதிருப்தி அவ்வமைப்பிற்கு ஏற்பட்டது.

இது தனது அமைப்பிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிருப்தியை ஏற்படுத்திய விடயமென குறிப்பிட்டு கனடாவின் தமிழ்க் காங்கிரங் அந்நாட்டிலுள்ள ஒஸ்டாராயோகி நீமன்றில் வழக்கொன்ைறத் தாக்கல் செய்தது. அவ்வழக்கில் அந்த அமைப்பு சட்டவிரோதமாக மற்றும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புள்ளதாக அர்த்தப்படுத்தும் வகையில் ரொஹான் குணரத்ன பொய்யாக அவமானமேற்படுத்தியதாக தீர்ப்பு வழங்கியது. அந்த அவமானத்திற்கு நஷ்டஈடாக வழக்குச் செலவாக 53 ஆயிரம் கனடியன் டொலர் (ரூ 69 இலட்சம்)​வழங்க உத்தரவிட்டது. இதன் மூலம் அவரின் கூற்று தவறானது என எவ்வித சந்தேகமும் இன்றி நிருபிக்கப்பட்டது.

இந்நாட்டிற்கு வெளியே அதிகமாக தமிழ் சமூகம் அங்கத்துவம் வகிக்கும் அமைப்பென்றால் அது கனடியன் தமிழ் காங்கிரஸாகும். அந்த அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கருத்து மோதல்களை தீவிரப்படுத்த சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி யுத்தக் குற்றம் போன்ற குற்றச்சாட்டுக்களை மேற்கொள்ளக் கூடிய பின்னணியை தயாரிக்க இந்த ஆய்வாளர் உதவி செய்ய முயற்சித்துள்ளார். தன்னை ஆய்வாளராக கூறிக் கொள்ளும் பயங்கரவாதம் தொடர்பான சர்வதேச ஆய்வாளர் 2014ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அவர் செய்த தவறு பற்றி அபூர்வமான விடயம் பற்றி தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு யுத்த வெற்றியின் பின்னரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இலங்கையில் அரசியல் புரிய இடமளித்தலாகும் என்பதே அந்த விடயம். அவரின் அரசியல் ஆய்வு எவ்வாறானதென்பதை இந்த கூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலம் தொடர்பாக பலவிதமான விமர்சனங்களை கூறுபவர்கள் கூட ஒருமித்ததாக எதிர்ப்பு தெரிவிக்கும் மேலே குறிப்பிட்ட 'கிணற்று தவளை' கூற்று மேலும் ரொஹான் குணரட்னவுக்கு இந்நாட்டு ஊடகங்களில் இடமொதுக்க வேண்டுமா என்பதை ஆழமாக சிந்திக்க தோன்றும்.

அன்று இந்நாட்டின் பாதுகாப்பு பிரிவினரை ஏளனப்படுத்தி எல்.ரீ.ரீ.ஈ யினருடன் யுத்தத்தில் வெற்றிபெற முடியாதென விவாதித்த ரொஹான் குணரத்ன இன்று சில இலத்திரனியல் ஊடகத்துக்கு இந்நாட்டு பாதுகாப்புப் படையினரின் திறமைபற்றி கூறுவது நகைச்சுவையாகும்.

இன்று பாதுகாப்பு பிரிவினர் பலமுடன் உள்ளதாக கூறுவதோடு 2015ம் ஆண்டின் பின்னர் இந்நாட்டின் சோதனைச் சாவடிகளை அகற்றி அரச பாதுகாப்பை பலவீனப்படுத்தியதாக மீண்டும் கூறியதை நாம் அவரின் கடந்த கால நடவடிக்கைகளின் சாரமாகவே புரிந்து கொள்ள வேண்டும். தனது நிலைப்பாட்டை ஒரே நாளில் மாற்றி எதிரான கருத்துகளை கூறுவது ரொஹான் குணரத்னவுக்கு கைவந்த கலையாகும்.

அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹிக் என்னும் அவுஸ்திரேலிய நாட்டவர் அல்கொய்தா அங்கத்தவர் என்றும் அவர் சிவில் மக்களை இலக்காகக் கொண்டு தாக்குதலை திட்டமிடவில்லை என்றும் அவ்வாறான தாக்குதலுக்கான தேவை அவருக்கு இல்லையென்றும் ஒருமுறை குணரத்ன கூறியிருந்தார்.

அதன் இரண்டு வாரத்தின் பின்னர் டேவிட் ஹிக் இராணுவ நீதிமன்றின் ஆஜர்படுத்தும் அளவுக்கு தம்மிடம் சாட்சி உள்ளதாக அமெரிக்க ஐக்கிய இராச்சியம் தெரிவித்த உடனேயே தனது நிலைப்பாட்டை மாற்றி கூற இந்த ஆய்வாளர் தொடங்கியுள்ளார். அதன்படி டேவிட் ஹிக் அல்கொய்தாவிடம் விசேட பயிற்சி பெற்றுள்ளதாகவும் அல்கொய்தாவிடம் டேவிட்டுக்காக விசேட திட்டமொன்று இருந்ததாகவும் வெட்கமின்றி ஊடகங்கள் முன் தெரிவிக்க குணரட்ன தயங்கவில்லை.

இந்நாட்டின் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்களை தெரிவித்திருந்தது இரகசியமான விடயமல்ல. அவ்வாறான திறமையுள்ள இந்நாட்டு புலனாய்வு பிரிவினரை 2015ம் ஆண்டின் பின் பலவீனமடையச் செய்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தும் ரொஹான் குணரட்ன இந்நாட்டு புலனாய்வுப் பிரிவு அங்கத்தவர்கள் 500 பேரளவில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக சாட்சிகள் இன்றி தெரிவித்துள்ளார்.

இது இந்நாட்டு அனைத்து பாதுகாப்பு படையினராலும் மதிக்கப்படும் விடயமாகும். தனது சரித்திரத்தின் பல நாடுகளில் மேற்கொண்டது போல் இந்நாட்டிலும் பாதுகப்பு பிரிவு பலவீனம் அடைந்துள்ளதாகவும் இந்நாட்டிற்கு விசேடமாக பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாகவும் மீண்டும் மீண்டும் கூறும் குணரட்ன நாளைய தினம் சர்வதேச உலவு பிரிவு அமைப்பு வேறொரு கருத்தை கூறினால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டாரென உறுதி வழங்க யாரால் முடியும்.

சர்வதேச பயங்கரவாத ஆய்வாளராக காட்டிக் கொண்டு இந்த பயங்கரவாத அமைப்பு பின்னால் உலகளாவிய அரசியல் பொருளாதார மோதல்களில் பாரிய கையொன்று செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளாத ரொஹான் குணரட்ன நாடுகளின் பாதுகாப்பு இன்மை தொடர்பாக தேவையற்ற பயத்தை காட்டி அதனூடாக தனது மடியை பலப்படுத்திக்கொள்ள சர்வதேச சூழ்ச்சி திட்டமொன்றை கையாளாகவோ அல்லது அரசியல் பலசாலிகளின் சம்பளத்தால் திருப்தியடைபவர் அல்ல என யாரால் உறுதி செய்ய முடியும்?

உலகப் பிரசித்தி பெற்ற ஹெவி வெயிட் பொக்ஸின் வீரரான மைக் டைசனின் கூற்று ரொஹான் குணரட்னவின் நடவடிக்கையை தெளிவுபடுத்துவதற்கு பொருத்தமானதென எண்ணுகின்றேன். “சிலர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கு முயற்சி செய்வது அவர்களின் அடிமைகளாக வைத்திருப்பதற்காகும்”. பயங்கரவாதம் எனும் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கு வந்துள்ள இந்த ஆய்வாளர் எந்த தென்னங்கன்று பக்கம் திரும்புகிறார் என புரிந்து கொள்வதற்கு வெறொரு ஆய்வு தேவையில்லை.

மஞ்சுள சமரசேகர
(ரெச)


Add new comment

Or log in with...