அரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம் | தினகரன்


அரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்

6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த 2014/2015 காலப்பகுதியில் லக் சதோச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட, சுமார் 2 இலட்சத்து 57 ஆயிரம் (257,000) மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குறித்த விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் எனும் வகையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக, இன்று (25) முற்பகல் 10.00 மணியளவில் அவரை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

சுமார் 6 ½ மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து பிற்பகல் 4.30 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


Add new comment

Or log in with...