2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் | தினகரன்

2022 இல் கொழும்பில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர்

கொழும்பு நகரின் சகல பிரதேசங்களிலுமுள்ள மக்களுக்கு 2022 ஆம் ஆண்டளவில் 24 மணி நேரமும் குழாய் மூலமான சுத்தமான குடிநீரை வழங்க நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய விசேட கருத்திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.  

தற்போது கொழும்பு நகரில் வாழும் மக்களில் 30 சதவீதமானோருக்கு 6முதல் 10 மணித்தியாலங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வழங்கப்படுகின்றது.

கொழும்புக்கு நீர் வழங்கும் குழாய்க் கட்டமைப்பு சுமார் 130 வருடங்கள் பழைமை  வாய்ந்ததாகும்.   கட்டமைப்பை மீளமைக்கும் விசேட கருத்திட்டமாக அமைச்சர் ஹக்கீமின் ஆலோசனையின் கீழ் அபிவிருத்தி அடைந்துவரும் கொழும்புக்கு நவீன மயப்படுத்தப்பட்ட நீர் வழங்கல் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கருத்திட்ட பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.ரஷீட் தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...