கோட்பாட்டின் கதை சொல்லி மார்க்சீம் கார்க்கி | தினகரன்

கோட்பாட்டின் கதை சொல்லி மார்க்சீம் கார்க்கி

மார்க்ஸிய பெரும் ஈடுபாட்டாளரான மார்க்சீம் கார்க்கி தன்னுடைய பெரும்பாலான படைப்புக்கள் அனைத்திலும் முதலாளித்துவ அதிகார முறைக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டினை காத்திரமான முறையில் விவரித்திருப்பதினை நாம் அவதானிக்க முடியும். குறிப்பாக தன்னுடைய தாய் ஒரு முழுமையான கம்யூனிஸ சித்தாந்தத்தின் முக்கிய பகுதிகளை காரசாரமான விவாத நிலைக்கு கொண்டு செல்வதாக வடிவமைக்கப்பட்டிருப்பதினை அவதானிக்க முடியும். இக்கட்டமைப்பில் இருந்துதான் தன்னுடைய படைப்பபுக்களுடன் சேர்த்தே மார்க்சீம் கார்க்கியும் மக்கள் மனதில் அழியாத இடத்தினைப் பிடித்தார். 

1868ல் ரஷ்யாவில் பிறந்த மார்க்சீம் கார்க்கி தன்னுடைய வாழ்வில் பெரும் சோகத்தினை அனுபவித்த ஒரு படைப்பாளி. இதனைப் பற்றி மார்க்சீம் கார்க்கியின் தாயில் எழுதப்பட்டிருக்கும் முன்னுரைக் குறிப்பே பெருத்த உதாரணமாகும்.

தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்துத் தற்கொலை செய்து கொள்ள முனைந்தார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக் கொண்டார். பின் பல வேலைகளில் உழன்று 1889ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ட்டாயைச் சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலன்கொ எனும் புகழ் மிக்க எழுத்தாளரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையைப் பரிசீலிக்கத் தந்தார். 1891ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்தார். இடையில் அவருடைய கன்னியும் மரணமும்| எனும் கவிதை வெளிவந்தது. தொடர்ந்து பல கவிதைகளும், சிறுகதைகளும், புதினங்களும் எழுதினார். அவருடைய பெயரும் மார்க்சீம் கார்க்கி என்றாயிற்று. இதுவே உலகம் முழுவதும் புகழ்பெற்று நிலைபெறுவதாயிற்று. கார்க்கி என்பதற்குச் கசப்பு என்பது பொருள். இக்குறிப்பிலிருந்து மார்க்சீம் கார்க்கியின் வாழ்வு மிகுந்த போராட்டத்திற்கு முகம் கொடுத்து பெரும் வெற்றி கண்ட வாழ்வாக இருந்திருப்பதினை நாம் உணர முடியும். 

இதுவே ஒரு காத்திரமிக்க படைப்பு மக்கள் மனதில் நிலையான பொக்கிஷமாக இருக்கின்ற போது அந்தப் படைப்போடு சேர்த்து அந்தப் படைப்பாளனும் வாழ்த்தப்படுகிறான். இதுதான் அப்படைப்பிற்கு கிடைக்கின்ற வெற்றி எனலாம். சில படைப்புக்கள் படைப்புக்களாக மட்டும் பேசப்படுகின்றன, சில படைப்புக்கள் படைப்பாளரின் பெயருக்காக பேசப்படுகின்றன. இவ்வகையான போக்குகளை உடைத்து தரம்மிக்க படைப்புக்கள் எவ்வகையானதாக இருப்பினும் அவை படைப்பினையும், படைப்பாளனையும் ஒன்றாக பேசுகின்ற போதே அது சிறந்த போக்காக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வரிசையில் தனது படைப்புக்களோடு சேர்த்து தன்னுடைய அடையாளத்தினையும், இருப்பினையும் தனித்துவமாக தக்கவைத்துக் கொண்ட மார்க்சீம் கார்க்கி ஒரு உயர்தரமான சிந்தனையாளன் என்பதில் ஐயமில்லை...  

 

 


Add new comment

Or log in with...