பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரேசா மே அறிவிப்பு | தினகரன்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரேசா மே அறிவிப்பு

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் தலைவர் பதவியிலிருந்து எதிர்வரும் ஜுன் 7 ஆம் திகதி தான் இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, இதன் மூலம் புதிய பிரதமரை தெரிவு செய்வதற்கான போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, தனது உணர்வுபூர்வமான முடிவை அவர் வெளியிட்டுள்ளார்.

பிரெக்ஸிட்டை தன்னால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்ற தனது கவலையையும் அவர் வெளியிட்டுள்ளார். அத்தோடு, புதிய பிரதமர் நாட்டின் விடயங்களில் மிகவும் கவனம் செலுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சிக்கான தலைவர் பதவிக்கு போட்டியிட்டியிட்டு ஒருவர் தெரிவுசெய்யப்படும் வரை தான் பிரதமராக பதவி வகிக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...