கொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம் | தினகரன்

கொட்டகலையில் 21 மாணவர்கள் திடீர் சுகவீனம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலையில் மாணவர்கள் 21 பேர் திடீர் சுகவீனம் காரணமாக  கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (24) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் -7 ஆங்கில பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் 21 பேரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களின் கை மற்றும் முதுகுப் பகுதிகளில்  அரிப்பு மற்றும் கொப்பழங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறையை பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இக்கல்லூரியில் தௌ்ளுப்பூச்சிகள் மாணவர்களை தாக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதிலும்,அங்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை என குறித்த கல்லூரிஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் கொண்ட போதிலும் அவ்வாறானதொரு நிலைமையும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க, குறித்த வகுப்பறையில் மாத்திரம் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்கு திடீரென  கைகள் மற்றும் முதுகு பகுதிகளில் அரிப்பு,கொப்பழங்கள் உருவாகியமைக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆகையினால் மாணவர்களை விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இதற்கான காரணங்களை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களும் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பிரிவினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.  

(ஜி.கே.கிருஷாந்தன் -ஹற்றன் சுழற்சி நிருபர்)   

 


Add new comment

Or log in with...