வெல்லாவெளியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு | தினகரன்

வெல்லாவெளியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (24) காலை  மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சடலத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் காக்காச்சிவெட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.ஹரிஹரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தின் தலையில் காயம் ஒன்று காணப்படுவதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 (வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)


Add new comment

Or log in with...