நாலக்க டி சில்வா பிணையில் விடுதலை | தினகரன்

நாலக்க டி சில்வா பிணையில் விடுதலை

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவை கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க பிறப்பித்துள்ளார்.

ரூபா 25,000  பெறுமதியான ரொக்கப் பிணையிலும், ரூபா 5 இலட்சம்  பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் அவர் இன்று (21) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதான இந்தியர் மெர்சிலி தோமஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...