மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 1475 சிம் அட்டைகள் மீட்பு | தினகரன்

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 1475 சிம் அட்டைகள் மீட்பு

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 1475 சிம் அட்டைகள் மீட்பு-1475 Sim Cards Found

மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த 1,475 சிம் அட்டைகளை மீட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கொச்சிக்கடை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொச்சிக்கடை, ஓவிட்டியாவ, மாஓய பிரதேசத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து, குறித்த சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குரிய குறித்த சிம் அட்டைகள், உரப் பை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொச்சிக்கடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...