ரிஷாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டு; தெரிவுக்குழு நியமிக்க முடிவு | தினகரன்

ரிஷாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டு; தெரிவுக்குழு நியமிக்க முடிவு

ரிஷாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டு; தெரிவுக்குழு நியமிக்க முடிவு-Parliament Selection Committee-Allegations Against Rishad Bathiydeen

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டான பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னரான நிகழ்வுகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

இதேவேளை, தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கும் சபாநாயகர் உடனடியாகத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென, கடந்த மே 11 ஆம் திகதி இடம்பெற்ற, உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...