மலேசியாவுக்கு தப்ப முயன்ற ரொஹிங்கியர்கள் தடுத்துவைப்பு | தினகரன்

மலேசியாவுக்கு தப்ப முயன்ற ரொஹிங்கியர்கள் தடுத்துவைப்பு

பங்களாதேஷிலிருந்து, மலேசியாவுக்குப் படகு வழி தப்பிச் செல்லவிருந்த 84 ரொஹிங்கிய அகதிகளை அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் அகதிகளைக் கண்டுபிடித்தனர்.

கூட்டம் நிறைந்த பங்களாதேஷ் அகதி முகாம்களிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தப்பிச் செல்வதாக அதிகாரிகள் கூறினர். குறிப்பாக மலேசியா, தாய்லந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடி அவர்கள் அங்கு செல்வதாகக் கூறப்பட்டது.

வாழ்க்கை மேம்படும் என்ற நம்பிக்கையில், வாழ்நாள் முழுவதும் சேமித்த தொகையை அகதிகள் இத்தகைய படகுப் பயணங்களுக்குச் செலவிடுவதாய் அதிகாரிகள் கூறுகின்றனர். அகதிகளில் பலர் அனைத்துலக ஆள்கடத்தல் கும்பல்களிடம் சிக்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.


Add new comment

Or log in with...