பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு | தினகரன்

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference
பேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் விரைவில் அறிமுகம்

பேஸ்புக் நிறுவனம் தனது வருடாந்த F8 மேம்பாட்டாளர் (Developer) மாநாட்டை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சென் ஜோஸ் (San Jose) இல் மேற்கொண்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற இந்நிகழ்வில் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனர் மார்க் ஷக்கர்பேக் (Mark Zuckerberg) அவரது பேஸ்புக் நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் செயலிகளான இன்ஸ்டாகிராம் (Instagram), வட்ஸ்அப் (WhatsApp), மெஸ்ஸென்ஜர் (Messenger) தொடர்பான பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்தார்.

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference

இந்நிகழ்வில் பேஸ்புக் நிறுவனம் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பதாக அடிக்கடி தெரிவித்த மார்க், அது பயனர்களின்  அந்தரங்கங்களை அல்லது தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு, தங்களை அறியாது, பல மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் வழங்கப்பட்டதாக எழுந்த கேம்பிறிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica) முறைகேடு தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தனிப்பட்ட தகவல்களை பிற நிறுவனங்களுக்கு வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் அவ்வாறு தெரிவித்துள்ளதாக தொழில்நுட்ப உலகத்தைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

தகவல் குறியாக்கம் (encryption), பாதுகாப்பான தரவு சேமிப்பு (secure data storage), தப்பட்ட தொடர்பாடல் (private interaction) இவற்றின் மூலம் பயனர்கள் அதன் தளத்தில் பல வழிகளிலும் தொடர்புறலாம். ஆயினும் ஒரு சில தகவல்கள் பின் வாசல் வழியாக கசியத் தான் செய்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

இந்நிகழ்வில் பல முக்கிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் whatsapp செயலியின் காரணமாக சற்று பிரபலம் இழந்துள்ள பேஸ்புக்கின் மெஸ்ஸெஞ்சர் செயலியை சற்று தரம் உயர்த்தும் நோக்கத்திற்காக, வீடியோ அழைப்பு வசதியின் அடுத்த கட்டமாக, ஒரே சமயத்தில் ஒரு வீடியோவை பலருடன் இணைந்து பார்க்கும் வசதி மெஸ்ஸெஞ்சரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கொடுப்பனவு மற்றும் கொண்டு சேர்த்தல் (payment and shipping) ஆகிய புதிய வசதிகளை பேஸ்புக் இணைய சந்தை (Facebook Marketplace), இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் போன்றவற்றை இணைய வழி கொள்வனவு (Online Shopping) தொடர்பில் அறிமுகம் செய்துள்ளது. இது அமசோன் (Amazon), ஈபே (eBay) போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் மீது அதன் பார்வை சென்றுள்ளதை உணர்த்துகின்றது என்றே கூற வேண்டும்.

தனிப்பட்ட தரவு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பேஸ்புக், குறூப் (Group) தொடர்பில் முக்கியத்துவம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, சிறிய குழுக்களுக்கிடையில் பகிர்தல் மற்றும் தொடர்பாடல் மேற்கொள்வதற்கு முக்கிய இடத்தை கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் இன்ஸ்டாகிராம் செயலியில் ‘லைக்’ எண்ணிக்கையை நீக்கி அதனை சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களைப் பற்றி குறைவாக மதிப்பிடாது தொடர்ந்தும் செயலியை பார்வையிடுவார்கள் (Scroll) என நம்புகின்றது. அத்துடன் மெஸ்ஸெஞ்சர் செயலியில் தகவல்கள் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு குறியீடாக்கம் மூலம் (end-to-end encrypted) அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்போது தனிநபர் தரவு தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிய பேஸ்புக் நிறுவன தயாரிப்பு செயற்பாட்டு அதிகாரிகள் (product executives) அது புதிதாக அறிமுகப்படுத்திய, dating மற்றும் shopping வசதிகள், நாம் யார் என்பதை அறிய வழி சமைக்கின்றன என்பது அதன் மறுபக்க உண்மையாகும்.

பேஸ்புக்கிற்கு புதிய தோற்றம்

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference
பேஸ்புக் இணையதளத்தை கணனி வழியாக பார்வையிடுவோருக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பேஸ்புக் நிறுவனம் நினைத்திருக்கலாம். காரணம் காலம் காலமாக இருந்து வந்த எங்கும் நீல மயம் எனும் நிலையை தற்போது பேஸ்புக் மாற்றியுள்ளது. எப்போதும் மொபைல் போன் வழியான செயலிகளை இற்றைப்படுத்தும் செயற்பாடுகளை புரிந்து வரும் பேஸ்புக் நிறுவனம், இணைய பயனர்களுக்கும் ஒரு மாற்றத்தை வழங்கியுள்ளது. குறித்த மாற்றம் செவ்வாய்க்கிழமை (30) அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய நாடுகளில் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த மாற்றம், ஓரிரு மாதங்களில் செயலிகளுக்கும் வரவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொபைல் ஊடான  அதே அமைப்பையும் அதே அனுபவத்தையும் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் புதிய Create Mode வசதி

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference
இன்ஸ்டாகிராமில் உள்ள கமெராவின் மூலம் மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Create Mode என அழைக்கப்படும் குறித்த வசதியின் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ அல்லாத விடயத்தை பகிர பகிர முடியும். குறிப்பாக தனியான varanam ஒன்றில் சொற்கள் அல்லது வசனங்களை டைப் செய்து, அசையும் அல்லது அசையா புகைப்படமாக (text or GIF) பகிர முடியும்.

இன்ஸ்டாகிராமில் ‘லைக்’ நீக்கம்

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference
இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் புகைப்படங்களின் ‘லைக்’ மற்றும் அதில் வெளியிடப்படும் வீடியோக்கள் பார்வையிடப்படும் எண்ணிக்கையான ‘வியுவ்’ ஆகியவற்றை மறைத்து சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பகிரப்படும் விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்துவார்கள் என்பதோடு அது தொடர்பான மக்களின் ஈடுபாடு மற்றும் அளவீடுகளை கவனத்தை எடுக்கமாட்டார்கள் என, நம்பப்படுகின்றது. இது இன்ஸ்டாகிராமில் குறைந்த தொடருனர்களை (Followers) கொண்டு உள்ளவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என நம்பப்படுகின்றது.

இதில் தொடருனர்களால், புகைப்படத்தின் ‘லைக்’ அல்லது வீடியோவின் ‘வியுவ்’ எண்ணிக்கைகளை அவர்களது சொந்த பக்கங்களில் அல்லது குறித்த நபரின் புரபைலிற்கு சென்று பார்வையிட முடியாது.  ஆயினும் தத்தமது கணக்கு உரிமையாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள ‘லைக்’ மற்றும் ‘வியுவ்’ களை குறித்த பதிவை அழுத்துவதன் மூலமே பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரத்தின் இறுதியில் கனடாவில் குறித்த சோதனை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணனிகளுக்கு மெஸ்ஸெஞ்சர் செயலி அறிமுகம்

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference
பேஸ்புக் மெஸ்ஸெஞ்சரின் மடி கணனிகளுக்கான பதிப்பொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் பேஸ்டைம் (FaceTime) மற்றும் ஐமெஸேஜ் (iMessage) செயலிகளை பின்தள்ளும் நோக்கில் குறித்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதும் மெஸ்ஸெஞ்சர் வசதியை இணையம் வழியாக பயன்படுத்தும் வசதி காணப்படுகின்றபோதிலும், செயலியில் காணப்படும் குழுவாக அழைத்தல் (Group Calling) போன்ற வசதிகள் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தற்போது அறிமுகமாகும் கணனிகளுக்கான செயலிகளில் அவ்வசதிகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் தரவுகளுக்கு அமைய, தனிநபர்களுக்கிடையிலான மெசேஜ் அனுப்பும் தகவல் பரிமாற்றமானது, இணையவழி தொடர்பாடலில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒன்றாக காணப்படுவதாக தெரிவித்துள்ளது. அத்துடன், மெஸ்ஸெஞ்சர் வழியாக வீடியோ வழி உரையாடல் வசதியை பயன்படுத்துவதற்கு எடுக்கும் நேரம் வருடாந்தம் 40 வீதத்தால் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

பலர் இணைந்து ஒரே வீடியோ பார்வையிடல்

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference
மெஸ்ஸெஞ்சரில் குழுவாக இணைந்து, வீடியோவை பார்வையிடும் ‘Group Watch’ வசதியை பேஸ்புக் நிறுவனம் சோதனை செய்து வருகின்றது. இதன் மூலம் வீடியோ அழைப்பு வழியாக, செய்திகளை பரிமாறியவாறு, ஒரு வீடியோவை பார்வையிடுவதற்கான அழைப்பை மற்றொரு நபருக்கு அனுப்பி, அவர்கள் இணைந்து குறித்த வீடியோவை பார்வையிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அது மாத்திரமன்றி, இன்ஸ்டாகிராமில், நிதி கோரும் வகையில் புகைப்படங்களில் தங்களது ஸ்டிக்கர் மூலம் கோரிக்கைகளை முன்வைத்து நிதி திரட்டும் வசதி “donation stickers” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference

அத்துடன் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் தாம் பொருளொன்றை கொள்வனவு செய்வது தொடர்பில் அது கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்த shopping tags எனும் வசதியை மேலும் மேம்படுத்தியுள்ளது. இது தற்போது வரை அமெரிக்கர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference

மேலும் புதிய நண்பர்களுடன் அறிமுகமாகும் வகையில் "Meet New Friends” எனும் வசதி பேஸ்புக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்களது பாடசாலை, வேலைத்தலம், நகரம் உள்ளிட்ட விடயங்களை பகிருவோருக்கு இவ்வசதி கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல புதிய அறிமுகங்கள் Facebook F8 மாநாட்டில் அறிவிப்பு-FB-F8-Conference

அத்துடன் "Secret Crush" எனும் வசதி மூலம் காதல் தொடர்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமது நண்பர்களின் 9 பேரை தெரிவு செய்யும் நிலையில், இம்முறை மூலம் அவர்களில் ஒருவர் உங்களை தெரிவு செய்தால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம், காதலை வெளிப்படுத்த தயங்கும் நபர்கள் தங்களது காதலை இலகுவாக வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...