ஒருதொகை கற்றாழைகளுடன் இருவர் கைது | தினகரன்

ஒருதொகை கற்றாழைகளுடன் இருவர் கைது

ஒருதொகை கற்றாழை மரக் கன்றுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை,  கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து  நேற்று (18) கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பிடுங்கப்பட்ட கற்றாழை மரக் கன்றுகளை லொறியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்றபோதே, இச்சந்தேக நபர்களை வங்காலை பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

வங்காலை காட்டுப்பகுதியில் பிடுங்கப்பட்ட இக்கற்றாழை மரக் கன்றுகள்  18 சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததாகவும்,  சுமார் 510 கிலோகிராம் நிறையுடையாக இக்கற்றாழை மரக் கன்றுகளை காணப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னார், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 39, 36 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர். 


Add new comment

Or log in with...