யாழில் கார் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம் | தினகரன்

யாழில் கார் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்

யாழில் கார் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்-Car Accident-1 Dead-2 Injured-Theevakam Jaffna

யாழ்பாணம், தீவகம், பண்ணை வீதியில் இடம்பெற்ற  கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழில் கார் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்-Car Accident-1 Dead-2 Injured-Theevakam Jaffna

இன்று (19) பிற்பகல் 5.00 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இவ்விபத்து  நிகழ்ந்துள்ளது.

குறித்த மூவரும், காரில் மண்கும்பான் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் கார் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்-Car Accident-1 Dead-2 Injured-Theevakam Jaffna

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சாரதி உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் கார் விபத்து; ஒருவர் பலி; இருவர் காயம்-Car Accident-1 Dead-2 Injured-Theevakam Jaffna

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Add new comment

Or log in with...