படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 95 விவசாயிகளுக்கு நட்டஈடு | தினகரன்

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 95 விவசாயிகளுக்கு நட்டஈடு

மட்டக்களப்பு, மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் பிரிவில்  படைப்புழு தாக்கத்தால் சோளம் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்ட  95 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக நட்டஈடு வழங்கப்பட்டது. 

இதன்போது, குறித்த 95 விவசாயிகளுக்கும்  18 இலட்சத்து  50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.

சோளம் செய்கையில் படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக நட்டஈடு வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த வருடம் மட்டக்களப்பில்   சோளம் செய்கையில் படைப்புழுவின் தாக்கத்தால்  நூற்றுக்கணக்கான ஏக்கர் சோளம்  அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

(சதீஸ் -வவுணதீவு  நிருபர்) 


Add new comment

Or log in with...