Tuesday, April 16, 2024
Home » 2024 இல் 23 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்ப்பு

2024 இல் 23 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்ப்பு

நான்கு தினங்களில் 25,000 பேர் வருகை; சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு

by damith
January 8, 2024 6:00 am 0 comment

இவ்வருடத்தின் கடந்த நான்கு தினங்களில் 25,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 4 ஆம் திகதி வரையில் மாத்திரம் 25,619 உல்லாசப் பிரயாணிகள் பல்வேறு நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்தே அதிகளவான உல்லாசப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் 5,060 பேர் ரஷ்யாவிலிருந்தும் 3,333 பேர் இந்தியாவிலிருந்தும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக ஜெர்மனி, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இந்த நான்கு தினங்களுக்குள் குறிப்பிடத்தக்களவு உல்லாசப் பிரயாணிகள் வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. அதேவேளை, கடந்த வருடத்தில் மாத்திரம் 14,87,303 உல்லாசப் பிரயாணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் இவ்வருடத்தில் அந்த எண்ணிக்கை 23 இலட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT