காதலின் பிரதி வெண்ணிற இரவுகள் | தினகரன்

காதலின் பிரதி வெண்ணிற இரவுகள்

தஸ்தயேவ்ஸ்கி ஒரு மலை ச்சிகரம் சீமான்களின் ஜிகினா பவிஷீகள் காற்றோடு போக, மேம்பட்ட கலைஞனின் கொடி, கம்பம் இன்றிக் காலத்தின் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிறது! என்றார் சுந்தரராமசாமி. யதார்த்தத்தினை வெளிப்படுத்துகின்ற செயற்பாட்டினைத்தான் இலக்கியம் என்கிறோமா என்பதில் வாதப் பிரதி வாதங்கள் இருந்தாலும் இலக்கியமானது தனது போக்கினை ஏதோ ஒரு அமைப்பில் மனித வாழ்வினூடாகவும், யதார்த்தங்களை தாண்டிய அண்டவெளி சமாச்சாரங்களின் வழியாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

அவ்வகையான இலக்கிய போக்கிற்கு தனித்த வழியமைப்பினை அடையாளமாகக் கொண்ட காத்திரமான எழுத்தாளன் தஸ்தயேவ்ஸ்கி எனலாம். ரஷ்ய மொழி எழுத்தாளரான இவரின் படைப்புகள் தமிழ் சூழலில் பல மெகா ஹிட் எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களில் தஸ்தயேவ்ஸ்கி இடைவிடாது பயணிப்பார். இளம் பருவத்திலிருந்தே இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்ட தஸ்தயேவ்ஸ்க| நாடகங்கள், கலை நிகழ்வுகள் மீதும் தன்னுடைய அதிக அக்கறையினை காட்டினார். 1840 ஆம் ஆண்டு இவருடைய முதல் நாவலான 'ஏழை மக்கள்' இலக்கிய உலகினுள் பெரும் கதையாடலினை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் மிகப் பிரபல்யமான நிகழ்வாக நடைபெற்ற பீத்தர்புர்க் இலக்கிய கூட்டங்களில் இந் நாவல் பற்றிய காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று தஸ்தயேவ்ஸ்கி எனும் அடையாளம் வேரூன்றி இலக்கிய மண்ணில் பதிந்தது எனலாம். எழுத்தாளனாக மட்டும் தன்னுடைய வாழ்வியலை முடித்துக் கொள்ளாமல் தான் எழுதுகின்ற எழுத்துக்களை செயற்படுத்துகின்ற செயற்பாட்டாளனாகவும் தஸ்தயேவ்ஸ்கி செயற்பட்டார்.

பெத்ரஷாவ்ஸ்கி லிபரல் இலக்கியவியல் கழகத்தில் 1849ம் ஆண்டு ஈடுபட்டமைக்காக தஸ்தயேவ்ஸ்கிற்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு பின்பு அது நான்கு வருட சைபீரியக் கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டது. தஸ்தயேவ்ஸ்கியுடைய படைப்புகள் மனித அவலங்களையும், அதிகார நெருக்கடி நிலைகளை கட்டுடைப்பு செய்வதாகவும் அமைந்திருந்தது. இவருடைய The Brothers Karamazov நாவலை அரும்பு சுப்பிரமணியன் ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். படைப்புக்களின் காத்திரம் என்பது அவை சமூக மையங்களுடன் ஊடருத்து பல்வேறு கதையாடல்களை உருவாக்கி காலத்தோடு கலத்தல் என்பதே அப்படைப்பின் சுய மரியாதை ஆகும். அதில் வெற்றி கண்ட படைப்பாளிதான் தஸ்தயேவ்ஸ்கி...   


Add new comment

Or log in with...