வெசாக்: கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி | தினகரன்

வெசாக்: கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி

வெசாக் பண்டிகை தினங்களில் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது, நண்பர்களையோ சந்திக்க சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய  நாளை மறுதினம் (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமையும் (20) இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான குற்றங்களுடன் தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கே விசேட பாதுகாப்பின் கீழ் தங்களது உறவினர்களை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் தினைணக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த இரு நாட்களிலும் கைதிகளை பார்வையிட வருவோர், உணவு மற்றும் ஏனைய பொருட்களை கொண்டுவர முடியும் என்பதோடு, அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டே கைதிகளுக்கு வழங்க அனுமதிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.  

 


Add new comment

Or log in with...