110.7 மில். டொலருக்கு ஏலம் போன ஓவியம் | தினகரன்

110.7 மில். டொலருக்கு ஏலம் போன ஓவியம்

பிரபல ஓவியர் கிலோட் மொனே கைவண்ணத்தில் உருவான ஓவியம் ஒன்று நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 110.7 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.

வைக்கோல் குவியல்களை அவர் ஓவியத்தில் சித்திரித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சாதனை அளவாக, மொனேயின் ஓவியம் ஒன்று 84.6 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டது.

அதைவிடக் கூடுதல் விலைக்கு இம்முறை மற்றொரு மொனே ஓவியம் ஏலம்போயுள்ளது. இதன்படி ஏலத்தில் அதிக விலைபோன ஒன்பதாவது ஓவியமாக இது இருப்பதாக இந்த ஏலத்தை நடத்திய ஏற்பாட்டுக் குழு குறிப்பிட்டுள்ளது.

 

ஏலம் கேட்ட ஐவரை பின்தள்ளியே இந்த ஓவியத்தை அதன் கொள்வனவாளர் வாங்கியதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது. எனினும் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.


Add new comment

Or log in with...