இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி சிறுமி தற்கொலை | தினகரன்

இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்தி சிறுமி தற்கொலை

மலேசியாவில் பதின்ம வயதி சிறுமி ஒருவர் தான் உயிர்வாழ்வது அல்லது உயிரிழப்பது பற்றி இன்ஸ்டாகிராமில் வாக்கெடுப்பு நடத்திய நிலையில் உயிரிழந்தது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வாக்கெடுப்பில் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், 16 வயதான அந்த சிறுமி அந்த வாக்கு முடிவுகளை கடந்த திங்களன்னு தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அவரது உயிரிழப்பை பொலிஸார் ‘திடீர் மரணம்’ என்று அறிவித்துள்ளனர்.

“மிக முக்கியமானது, நான் உயர்வாழ்வதா அல்லது சாவதா என்பதை தீர்மானிக்க உதவுங்கள்” என்று அந்த சிறுமி இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார். இதில் 69 வீதமான வாக்குகள் உயிரை மாய்க்க ஆதரவாக கிடைத்திருப்பதோடு 31 வீதம் மாத்திரமே எதிராக பதிவாகி இருந்ததாக உள்ளுர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மன அழுத்தத்தால் பாதிப்பட்டிருக்கும் அந்த சிறுமி “நான் களைப்படைந்திருக்கிறேன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...