பொத்துவில் றைஸ் ஸ்டார் கழகம் சம்பியன் | தினகரன்

பொத்துவில் றைஸ் ஸ்டார் கழகம் சம்பியன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்தவாரம் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு பொத்துவில் றைஸ் ஸ்டார் மற்றும் லிவர் பூல் அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப்போட்டியில் றைஸ் ஸ்டார் அணி பெனால்ட்டி முறையில் 3-–4 : 1-–4 என்கிற வகையில் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.

இந்த ஆண்டில் றைஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகம் மூன்று உதைபந்தாட்ட கிண்ணங்களை சுவீகரித்துக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் பிரதேச செயலக உதைபந்தாட்ட கிண்ணம், ஆர்.எம். விளையாட்டுக் கழகம் நடாத்திய உதைபந்தாட்டப்போட்டி உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வெற்றிக்கிண்ணம் என்பனவாகும். பொத்துவில் பிரதேசத்தில் உதைபந்தாட்டத்தில் பிரபல்யம் அடைந்துவரும் ஒரு கழகமாக றைஸ் ஸ்டார் கழகம் உள்ளது.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்


Add new comment

Or log in with...