சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து | தினகரன்

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு, அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளது.

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இவ்வாறான வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டமையை நாங்கள் வரவேற்கின்றோம். 

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் வன்முறையை தூண்டுபவர்களுக்கும் சட்டம் சமமானதாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.” எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...