கைதான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை | தினகரன்

கைதான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துநர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில்  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்இன்று (16)  விடுவித்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது,  விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய தலைவரின் புகைப்படம் மற்றும்  பதாதைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

(மயூரப்பிரியன் -யாழ்.விசேட நிருபர்)


There are 2 Comments

DISTURBING YOUNG BOYS STUDIES IS FUCKING BULLSHIT

This is an unwanted issue created by the Defence forces. The main focus should be ISIS and not Jaffna students The main motive is to disorganize the May 18, 2019, Maveerar day

Add new comment

Or log in with...