பொதுப் போக்குவரத்து துறைகளில் வருமானம் குறைவு | தினகரன்

பொதுப் போக்குவரத்து துறைகளில் வருமானம் குறைவு

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர், பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமானளவு குறைவடைந்துள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாதாரண வேளைகளில் ரயில்வே திணைக்களத்திற்கு 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதாகவும், குண்டுத் தாக்குதல்களின் பின்னர் 8 மில்லியன் ரூபாவாக, 50 வீதம் வரை வருமானம் குறைந்துள்ளதாக, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெனாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு தினமும் 25 மில்லியன் முதல் 30 மில்லியன் ரூபா வரை கிடைத்து வந்த வருமானம், சற்று குறைந்துள்ளதாக, இ.போ.சபையின் பிரதி பொது முகாமையாளர் ரொஷான் சந்திரசிறி தெரிவித்தார்.

தனியார் பஸ் சேவைக்கு நாளாந்த வருமானமாக 75 முதல் 80 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வந்தபோதிலும், தற்போது சற்று குறைந்து விட்டதாக, லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.  


Add new comment

Or log in with...