Thursday, March 28, 2024
Home » சர்வதேச சாதனைகளைப் படைத்த அகிலத் திருநாயகியை கௌரவித்த ஜனாதிபதி

சர்வதேச சாதனைகளைப் படைத்த அகிலத் திருநாயகியை கௌரவித்த ஜனாதிபதி

- துணிச்சலான விளையாட்டு வாழ்க்கைக்கும் வாழ்த்து

by Rizwan Segu Mohideen
January 7, 2024 8:23 pm 0 comment

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் இடம்பெற்ற National Masters and Seniors Athletics தடகள விளையாட்டு போட்டிகளில் பங்குபற்றி, 5,000 மீற்றர் மற்றும் 1,500 மீற்றர் 800 மீற்றர் போட்டிகளில் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்ற முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார்.

வடமாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (06) இச்சந்திப்பு இடம்பெற்றது.

72 வயதான ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரியான இவர் சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் திறமை காண்பித்த அவர் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒன்பது சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் ஆறாவது பெண்ணாக பிறந்தார்.

அகிலத்திருநாயகி, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவில் நடைபெற்ற பல சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

திருமதி அகிலத்திருநாயகியின் விளையாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசில் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

அவரது துணிச்சலான விளையாட்டு வாழ்க்கைக்கும் ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார்.

யொஹானிக்கு வீடு, அகிலத்திருநாயகிக்கு? சாணக்கியன் கேள்வி

72 வயதிலும் சாதனை படைத்த அகிலத்திருநாயகி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT