அமெரிக்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி ஐவர் பலி | தினகரன்

அமெரிக்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதி ஐவர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 10 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் பற்றித் தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் 12 பேர் இருந்தனர் மற்றொரு விமானத்தில் 5 பேர் இருந்தனர்.

சீபிளேன் எனப்படும் சிறு விமானங்கள் தரை, கடல் இரண்டிலிருந்தும் மேலெழக்கூடியது மற்றும் இரண்டிலும் தரையிறங்கக்கூடியவையாகும்.

சுற்றுலாப் பயணிகளை அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அந்த வகை விமானங்கள் மூலம் அழைத்துச் செல்வதை சில கரையோரக் கேளிக்கை விடுதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களும் ரோயல் பிரின்சஸ் என்ற ஒரே சொகுசு கப்பலை சேர்தவையாகும். அலாஸ்காவின் கிச்சிக்கன் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோதே இரு விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டுள்ளன.


Add new comment

Or log in with...