அமெ. முன்னாள் ஜனாதிபதி வழுக்கி விழுந்ததில் காயம் | தினகரன்

அமெ. முன்னாள் ஜனாதிபதி வழுக்கி விழுந்ததில் காயம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் வழுக்கி விழுந்து இடுப்பில் அடிபட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

94 வயதாகும் ஜிம்மி காட்டர் வொஷிங்டன் இல்லத்தில் இருந்து வேட்டைக்கு புறப்பட்ட போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்தார்.

இதில் அவரது இடுப்பில் பலமாக அடிபட்டு வலியால் துடித்தார்.

அவரை உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவரது உடல்நிலை தேறிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்டர் 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தார்.


Add new comment

Or log in with...