வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டம் | தினகரன்

வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டம்

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள  நீர் நிலைகளில் வெளிநாட்டுப் பறவைகளின்  நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதோடு, இப்பறவை இனங்களை பலர் கண்டு ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக,  அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச நீர் நிலைகளில் இப்பறவை இனங்கள் அதிகளவில் காணப்படுவதோடு, இவற்றை கண்டு ரசிப்பதற்காக பலர் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.  

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கைக்கு வருகை தரும் இப்பறவை இனங்கள், தமது இனப் பெருக்கத்தினை மேற்கொண்டதன் பின்னர், சொந்த இடங்களுக்குச் செல்கின்றன. நீர் நிலைகளில் முகாமிட்டு அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மரங்களில் தங்கியிருந்து இனப் பெருக்கத்தினை மேற்கொள்கின்றன.

இப்பறவை இனங்களின் உடல்நிலைக்கேற்ப காலநிலையின் பரம்பல் வெகுவாக தாக்கம் செலுத்துவதால், காலநிலையினை தாங்கிக்கொள்ள முடியாமலும், தமக்கான உணவினை தேடி உண்ண முடியாமலும், இவ்வாறான பறவை இனங்கள் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று வருவதாகவும் தெரியவருகின்றது.

(ரமீஸ் -அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...