புகைத்தலால் வாரம் 400 பேர் உயிரிழப்பு | தினகரன்

புகைத்தலால் வாரம் 400 பேர் உயிரிழப்பு

நாட்டில் புகைத்தலினால் ஒவ்வொரு வாரமும் சுமார் 400 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  இவர்களில் பெருமளவிலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்கள் எனத் தெரிவித்த அமைச்சர், தற்பொழுது புகைத்தலினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையிலும் விட கூடுதலானதாகும் என்றும் தெரிவித்தார்.  

சிகரெட்டுகளுக்காக உலகில் ஆகக்கூடுதலான வரியை அறவிடும் நாடு இலங்கையாகும் எனத் தெரிவித்த அமைச்சர், 95சதவீத வரி அறவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

புகைத்தலால் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்குள்ளாகும் நபர்களுக்காக சுமார் 300 பில்லியன் ரூபாய் வருடாந்தம் செலவிடப்படுகின்றது.

இருப்பினும் வரியின் மூலம் வருடாந்தம் கிடைக்கும் வருமானம் 80 பில்லியன் ரூபாய் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

 


Add new comment

Or log in with...