இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு | தினகரன்

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்தியமத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும், இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடப்பதன் காரணமாக, விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை அந்நாட்டு உள்விவகார அமைச்சு நீடித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுப்பதற்காகவே குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...