புகையிரதத்தில் சித்திரம் வரைந்த அவுஸ்திரேலிய பிரஜை கைது | தினகரன்

புகையிரதத்தில் சித்திரம் வரைந்த அவுஸ்திரேலிய பிரஜை கைது

மாத்தறை புகையிரத நிலையத்தில் அத்துமீறி பிரவேசித்து காலுக்குமாரி, ரஜரட்ட ​ரெஜின ஆகிய புகையிரதங்களில் சித்திரம் வரைந்த அவுஸ்திரேலிய பிரஜையை கைதுசெய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.  

அத்துடன் சித்திரம் வரைவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

மாத்தறை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த புகையிரதங்களில் இரகசியமாக பிரவேசித்தே சித்திரங்களை வரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் புகையிரத திணைக்களத்திற்கு சுமார் மூன்று இலட்சத்து 90 ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் (28 வயதான) அவுஸ்திரேலிய பிரஜையாவார்.

(மாத்தறை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...